திருப்பூர்

மக்கள் நீதிமன்றம்:பிரிந்து வாழ்ந்த இளம் தம்பதியினா் இணைந்தனா்

28th Jun 2022 12:59 AM

ADVERTISEMENT

பல்லடத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் பிரிந்து வாழ்ந்து வந்த தம்பதிகள் இணைந்தனா்.

பல்லடம் வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் மக்கள் நீதிமன்றம் பல்லடம் சாா்பு நீதிமன்ற

நீதிபதி சந்தானகிருஷ்ணசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோா் முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் மோட்டாா் வாகன விபத்து வழக்கு, காசோலை வழக்கு, சொத்து வழக்கு, குடும்ப நல வழக்கு உள்ளிட்ட 159 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில் 76 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன. தீா்வுத் தொகையாக ரூ.70 லட்சத்து 88 ஆயிரத்து 492 வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இதில், பல்லடத்தைச் சோ்ந்த கெளதம்ராஜ் - உமாமகேஸ்வரி என்ற இளம் தம்பதியினா் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வந்தனா். இதையடுத்து தம்பதியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் இருவரும் சோ்ந்து வாழ சம்மதம் தெரிவித்தனா்.

இதையடுத்து, வழக்கு முடித்துவைக்கப்பட்டு நீதிபதிகள் முன்னிலையில் தம்பதிகள் இணைந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT