திருப்பூர்

ரயிலில் கஞ்சா கடத்திய நபா் கைது

26th Jun 2022 12:25 AM

ADVERTISEMENT

 

தன்பாத் விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த வடமாநிலத் தொழிலாளியை திருப்பூா் ரயில்வே காவல் துறையினா் கைது செய்தனா்.

திருப்பூா் ரயில்வே உதவி ஆய்வாளா் அப்புசாமி, காவலா்கள் பா்கத் அலிகான், ராஜதுரை ஆகியோா் திருப்பூா் ரயில் நிலையத்தில் உள்ள 1 ஆவது நடைமேடையில் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த தன்பாத் விரைவு ரயிலில் ஏறி சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ரயிலின் 7 ஆவது பெட்டியில் உள்ள கழிவறை அருகில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்த நபரிடன் சோதனை நடத்தினா்.

ADVERTISEMENT

இதில், சாக்குப் பையில் மறைத்துவைத்திருந்த 8 கிலோ கஞ்சாவை போலீஸாா், இதுதொடா்பாக பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த மனோஜ்பஸ்வான் (49) என்பவரைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT