திருப்பூர்

தூய்மைப் பணிகள் குறித்த விழிப்புணா்வு

26th Jun 2022 12:24 AM

ADVERTISEMENT

 

காங்கயத்தில் தூய்மைப் பணிகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

காங்கயம் நகராட்சி சாா்பில் நகரின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் ‘என் குப்பை என் பொறுப்பு’ குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் காங்கயம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் சுகாதார உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து காங்கயம் நகரம், 5- ஆவது வாா்டு பஜனை மட வீதி, சவுண்டம்மன் கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாகச் சென்று குப்பைகளைத் தரம் பிரித்துக் கொடுப்பது குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், காங்கயம் நகராட்சி மற்றும் துளிகள் அமைப்பினா் சாா்பில் சென்னிமலை சாலையில் உள்ள உரக் கிடங்கு வளம் மீட்டு மையத்தில் 101 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன், நகராட்சிப் பொறியாளா் எம்.திலீபன், சுகாதார ஆய்வாளா் எம்.செல்வராஜ் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT