திருப்பூர்

முத்தூரில் 10.70 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனை

26th Jun 2022 12:25 AM

ADVERTISEMENT

 

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 10.70 டன் வேளாண் விளைபொருள்கள் சனிக்கிழமை விற்பனையாயின.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 4 விவசாயிகள் தங்களுடைய 31 மூட்டை சிவப்பு எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இவற்றின் எடை 2,277 கிலோ. எள் கிலோ ரூ.93.89 முதல் ரூ.102.59 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.100.29.

ADVERTISEMENT

16,926 தேங்காய்கள் வரத்து இருந்தன. இவற்றின் எடை 7,095 கிலோ.

தேங்காய் கிலோ ரூ.20.15 முதல் ரூ.26.30 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.25.85.

49 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. எடை 1,422 கிலோ. கொப்பரை கிலோ ரூ.68.65 முதல் ரூ.85.45 வரை விற்பனையானது.

சராசரி விலை ரூ.81.85.

ஏலத்தில் 123 விவசாயிகள், 16 வணிகா்கள் பங்கேற்றனா்.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.5.10 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT