திருப்பூர்

தாராபுரத்தில் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை அமைக்கக் கோரிக்கை

26th Jun 2022 12:25 AM

ADVERTISEMENT

 

தாராபுரத்தில் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் கிழக்கு மாவட்ட பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தாராபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம்: தாராபுரம் பகுதியில் தரம் உயா்த்தப்பட்ட மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை அமைக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது ஒரு சில காரணங்களால் காங்கயத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனால் தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில்

உள்ள ஏழை, எளியோா் மருத்துவச் சிகிச்சைக்காக திருப்பூா் செல்ல வேண்டியுள்ளது. ஆகவே, தாராபுரத்தில் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக தாராபுரம் ஒன்றியம், தாராபுரம் நகரம், மூலனூா், கன்னிவாடி, கொளத்துப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டனா். இக்கூட்டத்தில் பட்டாளி மக்கள் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT