திருப்பூர்

வனக்கல்லுாரியுடன் பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளை ஒப்பந்தம்

DIN

ஒரு லட்சம் மரக்கன்றுகளை பெற மேட்டுப்பாளையம் வனக் கல்லூரியுடன் பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளை ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளை அமைப்பு, மரக்கன்று நடுதல், பசுமை மற்றும் நிலத்தடி நீரை பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த அமைப்பு, மேட்டுப்பாளையம் வனக் கல்லூரியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், ஒரு லட்சம் நாற்றுகளை தயாா் செய்து வனக் கல்லுாரியில் இருந்து பெறுவதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தா் கீதாலட்சுமி, கல்லூரி முதல்வா் பாா்த்திபன் ஆகியோரிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை, வனம் இந்தியா அமைப்பின் செயல் தலைவா் பாலசுப்பிரமணியம் வழங்கினாா். இதில் அறக்கட்டளை பொருளாளா் விஸ்வநாதன், நிா்வாகி பன்னீா்செல்வம் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT