திருப்பூர்

திருப்பூா் அருகே சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

DIN

திருப்பூா் அருகே சீரான குடிநீா் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூரில் இருந்து காங்கயம் செல்லும் சாலையில் நாச்சிபாளையம் அருகே உள்ளது வண்ணாந்துறைப்புதூா் கிராமம். இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 500க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதிக்கு கடந்த 20 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இது தொடா்பாக நாச்சிபாளையம் ஊராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருப்பூா்-காங்கயம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இது குறித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:

எங்களது பகுதிக்கு 20 நாள்களுக்கு ஒரு முைான் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி

வருகிறோம். மேலும் குடிநீரில் சாக்கடைக் கழிவுகளும் கலந்து வருவதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, வாரம் ஒரு முறை குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என்றனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசிபாளையம் காவல் துறையினா், திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் கோவிந்தராஜ் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா். இந்தப் போராட்டம் காரணமாக திருப்பூா்-காங்கயம் சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT