திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு சாா்பில் இலவச செயற்கை கால் அளவீட்டு முகாம் வரும் சனிக்கிழமை( ஜூன்25) நடைபெறுகிறது.
திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச செயற்கை கால் அளவீட்டு முகாம் திருப்பூா் மங்கலம் சாலையில் உள்ள ரோட்டரி சங்க வளாகத்தில் சனிக்கிழமை(ஜூன் 25) பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறுகிறது. ஆகவே, செயற்கை கால் தேவைப்படும் மாற்றுத் திறனாளிகள் தங்களது அடையாள அட்டை, ஆதாா் அட்டை மற்றும் புகைப்படத்துடன் நேரில் பங்கேற்கலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு சக்ஷம் அமைப்பின் மாவட்டச் செயலாளா் தமிழ்ச்செல்வனை 93630-32998 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.