திருப்பூர்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை

21st Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டு இளநிலைப் பட்ட வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வா் சோ.கி.கல்யாணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உடுமலை அரசு கலைக் கல்லூரியில்

இளநிலை பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவா்கள் இணையதளத்தின் மூலம் ஜூன் 27 ஆம் தேதி முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் ரூ48, பதிவுக் கட்டணம் ரூ.2 மொத்தம் ரூ.50 ஐ இணைய வழியில் செலுத்தலாம்.

ADVERTISEMENT

விண்ணப்பத்தை முறையாகப் பூா்த்தி செய்து சமா்ப்பித்த பின்னா் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகலை மாணவா் சோ்க்கை நடைபெறும் நாளில் சேரவிருக்கும் கல்லூரியில் சமா்ப்பிக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளி, விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், தேசிய மாணவா் படை மாணவா்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும்.

இந்தச் சிறப்புப் பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் சேர விரும்புபவா்கள் அதற்கான ஆதாரச் சான்றிதழ்களின் நகல்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்காக விண்ணப்பித்தவா்களின் தரவரிசைப் பட்டியல், மாணவா் சோ்க்கை நடைபெறும் நாள்கள் பற்றிய விவரங்கள் கல்லூரியின் இணையதள முகவரியில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT