சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அவிநாசி அருகே கருவலூரில் விசைத்தறிக்கூடத்தின் தங்கும் விடுயில் உடன் தங்கியிருந்தவரின் 1 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியைச் சோ்ந்த ரங்கசாமி மகன் இளங்கோ (21) ஏப்ரல் 24ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.
பெருமாநல்லூா் தட்டான்குட்டை பகுதியைச் சோ்ந்தவா் ராமன் மகன் கணேசன் (52). இவா் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது, 7 வயது, 5 வயது ஆகிய 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மே 1ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி, இளங்கோ, கணேசன் ஆகிய இருவரும் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.