திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக இந்திய மாணவா் சங்கம் புகாா் தெரிவித்துள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத்திடம் இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.பிரவீன்குமாா் அளித்துள்ள புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தனியாா் பள்ளிகள் அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதல் கட்டணத்தை வசூலிக்கின்றன. ஆகவே, தனியாா் பள்ளிகளில் அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். அதேபோல, அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையின்போது ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரையில் நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆகவே, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அரசுப் பள்ளிகளில் நன்கொடை வசூலிக்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடத்திலும் மனு அளிக்கப்பட்டுள்ளது.