திருப்பூர்

உப்பாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

15th Jun 2022 10:54 PM

ADVERTISEMENT

தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணையில் இருந்து குடிநீா் தேவைக்காகவும் பாசனத்துக்காகவும் புதன்கிழமை முதல் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணையானது 24 அடி கொள்ளளவைக் கொண்டது. இதில், தற்போது 13.54 அடி நீா் இருப்பு உள்ளது. இந்த நிலையில், குடிநீா்த் தேவைக்காகவும், பாசனத்துக்காகவும் ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூலை 4 ஆம் தேதி வரையில் இரு சுற்று வீதம் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூன் 19 ஆம் தேதி வரையில் 5 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இதன் பின்னா் 10 நாள்கள் நிறுத்திவைக்கப்பட்டு இரண்டாவது சுற்றாக ஜூன் 30 ஆம் தேதி முதல் ஜூலை 4 ஆம் தேதி வரையில் 5 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்படவுள்ளது. அணையின் இடது மற்றும் வலது கால்வாய்களின் மூலமாக நாள்தோறும் 161.57 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறக்கப்படுவதால் தாராபுரம் வட்டத்தில் 6 ஆயிரத்து 60 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT