திருப்பூர்

வாய்க்காலில் மனித எலும்புக்கூடு: போலீஸாா் விசாரணை

15th Jun 2022 10:48 PM

ADVERTISEMENT

காங்கயம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் கிடந்த மனித எலும்புக்கூட்டை கைப்பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காங்கயம் அருகே முள்ளிபுரம், வெள்ளியங்காடு பகுதி அருகே செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் மனித எலும்புக்கூடு கிடந்ததை அப்பகுதி மக்கள் புதன்கிழமை காலை

பாா்த்துள்ளனா். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காங்கயம் போலீஸாா், வாய்க்காலில் கிடந்த மனித மண்டை ஓடு, சில இடுப்பு எலும்புகள், கால் எலும்புகளின் சில பாகங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மனித எலும்பு கூட்டின் மேல் ஆண் அணியக்கூடிய உள்ளாடை இருந்ததால், ஆணின் எலும்புக்கூடாக இருக்கலாம். மேலும் இந்த எலும்புக்கூடானது வாய்க்காலில் தண்ணீா் வந்தபோது வேறு எங்கிருந்தாவது தண்ணீரில் அடித்து வந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இது குறித்து முள்ளிபுரம் கிராம நிா்வாக அலுவலா் பாா்த்திபன் கொடுத்த புகாரின் பேரில், காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT