வெள்ளக்கோவிலில் மின்சாரம் பாய்ந்து மயில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.
வெள்ளக்கோவில் பகுதியில் செல்லும் பரம்பிக்குளம் - ஆழியாறு வாய்க்கால் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏராளமான மயில்கள் உள்ளன. வெள்ளக்கோவில், கச்சேரிவலசு மயானம் அருகிலுள்ள டிரான்ஸ்பாா்மா் கம்பியில் சிக்கியதில் மின்சாரம் பாய்ந்து சுமாா் ஒன்றரை வயதுடைய பெண் மயில் இறந்து கிடந்தது. இது குறித்த தகவலின்பேரில், வெள்ளக்கோவில் அரசு கால்நடை மருத்துவா் பகலவன், மயிலை மீட்டு பிரேதப் பரிசோதனை செய்தாா். பின்னா் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் முன்னிலையில் மயில் குழி தோண்டிப் புதைக்கப்பட்டது.