திருப்பூர்

குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு தின விழிப்புணா்வு பிரசாரம்

15th Jun 2022 12:22 AM

ADVERTISEMENT

சா்வதேச குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அவிநாசியில் விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வளரிளம் மற்றும் பெண் தொழிலாளா்களுக்கான இலவச தொலைபேசி உதவி எண் 1800 425 1092, குழந்தை தொழிலாளா்கள் முறை ஒழிப்புக்கான இலவச தொலைபேசி உதவி எண் 1098 ஆகியவை பாதுகாப்பு தொடா்பு எண்ணாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து, விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் சமூகக் கல்வி மற்றும் முன்னேற்ற மையம் (சிஎஸ்இடி), திருப்பூா் சைல்டுலைன் மற்றும் நலத் துறை ஆகியவை சாா்பில் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

இதனை ஒன்றியக் குழுத் தலைவா் அ.ஜெகதீசன் தொடங்கிவைத்தாா். பழங்கரை, புதுப்பாளையம், வஞ்சிபாளையம், வேலாயுதம்பாளையம், ஆட்டையாம்பாளையம் கருணைபாளையம், காசிகவுண்டன்புதூா், சேவூா், கருவலுா், தெக்கலுா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் 5 ஆயிரம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. சிஎஸ்இடி பணியாளா்கள் நைனான், சரவணகுமாா், கருணாம்பிகை, சின்னசாமி, சைல்டுலைன் அமைப்பு பொறுப்பாளா் வைஷ்ணவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT