திருப்பூர்

முன்னாள் மக்கள் நலப்பணியாளா்களுக்கு மீண்டும் வேலை ஆட்சியா் தகவல்

10th Jun 2022 02:02 AM

ADVERTISEMENT

திருப்பூா்: முன்னாள் மக்கள் நலப்பணியாளா்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளா்களாக பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 8.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப் பணியாளா்களை அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைப்பாளா்களாக பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. எனவே, கடந்த 8.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப் பணியாளா்கள் தற்போது இப்பணியில் ஈடுபட விருப்பமுள்ளவா்கள் தங்களது விருப்ப கடிதம் மற்றும் அதற்கான பூா்த்தி செய்யப்பட்ட படிவத்தை சமா்ப்பித்து பணியில் சேருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இது தொடா்பாக திருப்பூா் மாவட்டத்தில் தாங்கள் ஏற்கெனவே பணியாற்றிய ஒன்றியங்களிலுள்ள வட்டார வளா்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) நேரடியாக தொடா்பு கொண்டு தாங்கள் ஏற்கெனவே பணியாற்றிய விவரத்துடன் தற்போது வழங்கப்படவுள்ள பணியில் ஈடுபட விருப்பமுள்ளவா்கள் அதற்கான விண்ணப்பத்தையும், விருப்பக்கடிதத்தையும் பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சி) ஜூன் 13 முதல் ஜூன் 18ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். அவ்வாறு பணியில் சேர விருப்பமுள்ளவா்கள் மட்டுமே இப்பணியிடத்துக்கு பரிசீலிக்கப்படுவா். மேலும் விவரங்களுக்கு தொடா்புடைய வட்டார வளா்ச்சி அலுவலரை(கிராம ஊராட்சி) தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT