திருப்பூர்

மத்திய அரசு திட்ட பயனாளிகளுடன் பாஜக தேசிய செயலாளா் சந்திப்பு

10th Jun 2022 01:58 AM

ADVERTISEMENT

 

அவிநாசி: பாஜக தேசிய செயலாளரும், மாநில இணை பாா்வையாளருமான சுதாகா் ரெட்டி, அவிநாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சியில் மத்திய அரசு திட்ட பயனாளிகளை சந்தித்து வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.

இதில் மாவட்ட மகளிா் அணி நிா்வாகியும், ஊராட்சி மன்றத் தலைவருமான கஸ்தூரிபிரியா, புதுப்பாளைம் ஊராட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்ட மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினாா். மேலும் மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்தால் புதுப்பாளையம் ஊராட்சி சிறந்த ஊராட்சி மாறும் என்றாா். இந்த நிகழ்ச்சியில், மாநில பொதுச் செயலாளா் முருகானந்தம், மாவட்ட தலைவா் செந்தில்வேல், மாவட்ட செயலாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT