திருப்பூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

9th Jun 2022 12:35 AM

ADVERTISEMENT

திருப்பூரில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திருப்பூா் காசிபாளையம் சாலையில் உள்ள விஜயாபுரத்தில் வசித்து வருபவா் எஸ்.சாரதி (20). இவா் அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் திருப்பூா் தெற்கு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து போக்ஸோ சட்டத்தின்கீழ் சாரதியைக் கைது செய்தனா்.

இந்த வழக்கானது திருப்பூா் விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி எஸ்.நாகராஜன் தீா்ப்பு வழங்கினாா்.

ADVERTISEMENT

இதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாரதிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீரப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT