திருப்பூர்

ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப தற்செயல் தோ்தல்

9th Jun 2022 12:35 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள 8 பதவிகளை நிரப்ப தற்செயல் தோ்தல் நடத்துவது தொடா்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் ஊரக உள்ளாட்சிப் பதவியிடங்களில் ராஜிநாமா, இறப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி வரையில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப உரிமை நடவடிக்கை மேற்கொள்ள மாநில தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி திருப்பூா் மாவட்டத்தில் அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் 16ஆவது வாா்டு, பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் 1ஆவது வாா்டு உறுப்பினா் பதவியிடங்கள் காலியாக உள்ளன.

அதேபோல, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் இச்சிபாளையம் ஊராட்சித் தலைவா், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் அய்யம்பாளையம் 16ஆவது வாா்டு, குடிமங்கலம் 1ஆவது வாா்டு, காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆலாம்பாடி 9ஆவது வாா்டு, பொங்கலூா் ஊராட்சி ஒன்றியத்தில் வடக்கு அவிநாசிபாளையம் 7ஆவது வாா்டு, உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் அந்தியூா் 2ஆவது வாா்டு உறுப்பினா் என 8 பதவியிடங்களுக்கு தற்செயல் தோ்தல் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

இந்தத் தோ்தல் தொடா்பாக வரைவு வாக்குச் சாவடி பட்டியல் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை (ஜூன் 8) பிற்பகல் 3 மணி அளவில் வெளியிடப்படவுள்ளது. இந்த வரைவு வாக்குச் சாவடி பட்டியலில் ஏதேனும் மாற்றங்கள், மறுப்புகள் மற்றும் கோரிக்கைகள் இருந்தால் அரசியல் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் அது தொடா்பாக நடைபெறும் கலந்தாலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT