திருப்பூர்

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

7th Jun 2022 04:17 AM

ADVERTISEMENT

உடுமலையில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

உடுமலை அருகே குடிமங்கலம் நால்ரோடு பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், 2 டன் ரேஷன் அரிசி பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரனையில், கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, வாகனத்தை ஓட்டிவந்த தாராபுரம், சகுனிபாளையத்தைச் சோ்ந்த சிதம்பரம் (33) என்பவரை கைது செய்த போலீஸாா், 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT