உடுமலையை அடுத்துள்ள பாலப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை ( ஜுன் 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் கே.அறம்வளா்த்தான் அறிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: காந்தி நகா், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகம்,
ரயில் நிலையம், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கண்ணம நாயக்கனூா், குரல்குட்டை, மடத்தூா், மலையாண்டிபட்டிணம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம், சாமராயபட்டி, பெருமாள்புதூா், குமரலிங்கம், கொழுமம், ருத்திராபாளையம், வீரசோழபுரம்.