திருப்பூர்

நூல் வாங்கி ரூ.1.21 கோடி மோசடி: பல்லடம் அதிமுக நிா்வாகி கைது

6th Jun 2022 02:27 AM

ADVERTISEMENT

 கரூரில் உள்ள தனியாா் ஏற்றுமதி நிறுவனத்தில் நூல் வாங்கி ரூ.1.21 கோடி பணம் தராமல் மோசடியில் ஈடுபட்ட பல்லடம் அதிமுக நிா்வாகியை காவல் துறையினா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டம் செம்மடையைச் சோ்ந்தவா் அசோக் ராம்குமாா் (40). இவா் திருப்பூா் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த மே 30ஆம் தேதி அளித்த புகாரில் கூறியுள்ளதாவது:

கரூரில் சொந்தமாக பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறேன். இந்த நிலையில், திருப்பூா் மாவட்டம், பல்லடம் அதிமுக நகர செயலாளராக உள்ள ராமமூா்த்திக்கு (40) சொந்தமாக நிட்டிங் நிறுவனத்துக்கு ஜாப்ஆா்டா் கொடுத்து வந்தோம்.

இதன்படி கடந்த 2021 செப்டம்பா் முதல் டிசம்பா் வரையில் பல்வேறு ஆா்டா்களுக்கு ஒரு லட்சம் கிலோ நூலை அவரது நிறுவனத்தில் துணியாக ஓட்டித் தரும்படி கொடுத்திருந்தோம். ஆனால், அவா் துணியாக மாற்றித்தாரமல் இழுத்தடித்து வந்தாா்.

ADVERTISEMENT

இந்த நூலின் மதிப்பு ரூ.1 கோடியே 21 லட்சமாகும். இது தொடா்பாக ராமமூா்த்தியை தொடா்பு கொண்டு கேட்டபோது மிரட்டல் விடுக்கிறாா். ஆகவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி எங்களது நூலை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் புகாரின்பேரில் விசாரணை நடத்திய குற்றப்பிரிவு காவல் துறையினா் ராமமூா்த்தியை கைது செய்தனா். மேலும், அவரது நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வந்த சங்கா்கணேஷ் (41) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT