திருப்பூர்

பழையகோட்டை சந்தை: ரூ.24 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை

6th Jun 2022 02:31 AM

ADVERTISEMENT

காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூா் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் ரூ.24 லட்சத்துக்கு விற்பனையாயின.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 100 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 67 மாடுகள் மொத்தம் ரூ.24 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.90 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT