திருப்பூர்

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: ஒருவா் சாவு, 2 போ் படுகாயம்

2nd Jun 2022 01:24 AM

ADVERTISEMENT

காங்கயம் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். 2 போ் படுகாயமடைந்தனா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் ராஜூ (43) கத்தான் (35). காங்கயம் அருகே நல்லிக்கவுண்டன் வலசு பகுதியைச் சோ்ந்தவா் சுப்பன் மகன் ஆறுமுகம் (42). இவா்கள் 3 பேரும் காங்கயம் அருகே, சென்னிமலை சாலை, சாவடி பகுதியில் உள்ள தனியாா் அரிசி ஆலையில் வேலை செய்து வந்துள்ளனா். இந்த நிலையில் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் சாவடி அருகே புதன்கிழமை காலை சென்று கொண்டிருந்தனா். அப்போது, சாலை ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிந்த லாரியின் பின்புறத்தில் இவா்களது வாகனம் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ராஜூ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயம் அடைந்த ஆறுமுகம், கத்தான் ஆகியோரை அருகில் இருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் அவா்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இது குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT