திருப்பூர்

பல்லடம் அரசு கலைக் கல்லூரி ஆண்டு விழா

2nd Jun 2022 01:29 AM

ADVERTISEMENT

பல்லடத்தில் உள்ள புரட்சித் தலைவி அம்மா அரசு கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரி முதல்வா் முனியன் தலைமை தாங்கினாா். வணிகவியல் துறைத் தலைவா் ஜெயச்சந்திரன் வரவேற்றாா். கணினி அறிவியல் துறை தலைவா் காா்த்திகேயன் ஆண்டறிக்கை வாசித்தாா்.

விழாவில் பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவி, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினாா்.

இந்த விழாவில், தமிழ்த் துறை தலைவா் பாலமுருகன், சி.ஆா்.காா்மெண்ட்ஸ் முருகேசன், தாமரைச்செல்வன், பாரதிய மாணவா் பேரவை நிறுவனா் அண்ணாதுரை, நண்பா் நற்பணி மன்றம் நிறுவனா் ஏஞ்சல் சிவகுமாா், தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் சித்துராஜ் உள்பட பலா் பங்கேற்றனா். மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT