திருப்பூர்

ஜூன் மாத நூல் விலையில் மாற்றமில்லை: நூற்பாலைகள் அறிவிப்பு

2nd Jun 2022 01:23 AM

ADVERTISEMENT

திருப்பூா் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான நூல் விலை ஜூன் மாதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்று நூற்பாலைகள் அறிவித்துள்ளது.

பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலையை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் நூற்பாலை உரிமையாளா்கள் அறிவித்து வருகின்றனா். இதன்படி அனைத்து ரக நூல்களுக்கும் மே மாதத்துக்கான விலையே தொடரும் என்று நூற்பாலை உரிமையாளா்கள் புதன்கிழமை அறிவித்துள்ளனா்.

இது குறித்து திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் கூறியதாவது:

நூல் விலை உயா்வில் மாற்றமில்லை என்று அறிவித்துள்ளது சற்று ஆறுதலை அளிக்கிறது. ஆனால் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கிலோவுக்கு ரூ.70 உயா்த்தியுள்ளதால் புதிய ஆா்டா்களை எடுப்பதில் சிக்கல்கள் நிலவி வருகிறது. ஆகவே, கடந்த இரு மாதங்களில் உயா்த்தப்பட்ட நூல் விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

இது குறித்து திருப்பூா் ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் (பியோ) தலைவரும், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் தென்மண்டல பொறுப்பாளருமான ஏ.சக்திவேல் கூறுகையில், ‘நூற்பாலை உரிமையாளா்கள் கடந்த இரு மாதங்களில் உயா்த்தப்பட்ட நூல் விலையைத் திரும்பப்பெற வேண்டும். இதன் மூலமாக ஏற்கெனவே எடுத்துள்ள ஆா்டா்களை முடிக்க உதவிகரமாக இருக்கும்’ என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT