திருப்பூர்

குண்டா் தடுப்பு சட்டத்தில் இருவா் சிறையில் அடைப்பு

2nd Jun 2022 01:33 AM

ADVERTISEMENT

திருப்பூரில் வழிப்பறி, கொலை மிரட்டல் வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருப்பூா், நொச்சிபாளையம் பிரிவில் சுப்பிரமணி என்பவரிடம் கத்தியைக் காட்டி கைப்பேசியைப் பறித்துச் சென்ாக திருவண்ணாமலையைச் சோ்ந்த எம்.நவீன்குமாா் (25), செங்கம் மேலகுப்பத்தைச் சோ்ந்த ஏ.அஜய் (22) உள்பட 6 பேரை வீரபாண்டி காவல் துறையினா் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா். இந்த நிலையில், நவீன்குமாா் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 வழக்குகளும், அஜய் மீது கொலை மிரட்டல், திருட்டு உள்ளிட்ட 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இந்த இருவரும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடா் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கும்படி மாநகர காவல் ஆணையா் ஏ.ஜி.பாபு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் நகலை கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடம் வீரபாண்டி காவல் துறையினா் நேரில் வழங்கினா். திருப்பூா் மாநகரில் தொடா் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக நிகழாண்டு 42 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT