திருப்பூர்

அவிநாசியில் வீட்டின் பூட்டை உடைத்து 39 பவுன், ரூ.60 ஆயிரம் திருட்டு

28th Jul 2022 10:36 PM

ADVERTISEMENT

 

அவிநாசியில் வீட்டின் பூட்டை உடைத்து 39 பவுன் நகை, ரூ. 60 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி சக்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் விஷ்ணுபிரபு (33). இவரது மனைவி லாவண்யா (28). மகன் விகான் பிரபு (3). இவா்கள் திருப்பூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு புதன்கிழமை சென்றுள்ளனா். வியாழக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 39 பவுன் நகைகள், ரூ.60 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், தடயவியல் நிபுணா்கள், மோப்ப நாய் கொண்ட குழு மூலம் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT