திருப்பூர்

பல்லடம் நகராட்சித் தலைவரை ஒருமையில் பேசிய கவுன்சிலரை கண்டித்து நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானம்

28th Jul 2022 10:27 PM

ADVERTISEMENT

 

பல்லடம் நகா்மன்றக் கூட்டத்தில் நகராட்சித் தலைவரை ஒருமையில் பேசிய கவுன்சிலரை கண்டித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பல்லடம் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையா் விநாயகம், நகராட்சிப் பொறியாளா் ஜான்பிரபு, சுகாதார ஆய்வாளா் சங்கா், வருவாய் ஆய்வாளா் பிரகாஷ், நகராட்சி துணைத் தலைவா் நா்மதா இளங்கோவன், கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

ADVERTISEMENT

கவிதாமணி ராஜேந்திரகுமாா் (தலைவா்): பல்லடம் நகராட்சிப் பகுதியில் நிலவும் குடிநீா் பிரச்னையை தீா்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

18 வாா்டுகளை 6 மண்டலமாக பிரிக்கப்பட்டு கண்காணிப்பாளா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். தினசரி தீவிர தூய்மை பணி நடைபெறும்.

சசிரேகா (பாஜக): பேருந்து நிலைய கழிப்பிடம் முன்பு குத்தகைதாரா் பெயா் விவரத்துடன் தகவல் பலகை வைக்க வேண்டும். கடைகளில் நெகிழி பயன்பாடு அதிகமாக உள்ளது. இதைத் தடுக்க விழிப்புணா்வு பிரசாரம் செய்திட வேண்டும்.

ருக்மணி (திமுக): எனது வாா்டில் எந்த பணியும் நடைபெறவில்லை. மயான சாலையில் உள்ள கழிப்பிடத்தை உடனடியாக சீரமைத்து தர வேண்டும்.

தண்டபாணி (சுயேச்சை): பல்லடம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் அதிக அளவு பத்திரப் பதிவு நடைபெறுவதால் கூடுதலாக ஒரு சாா்பதிவாளரை நியமனம் செய்ய வேண்டும்.

கனகுமணி( அதிமுக): எனது வாா்டில் பூங்கா அமைத்து தர வேண்டும். மீனாட்சி அவென்யூ பகுதி மக்களுக்கு சப்பை தண்ணீா் வசதி செய்து தர வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

விவாதத்தில் பேசிய திமுக 4ஆவது வாா்டு உறுப்பினா் செளந்திரராஜன், நகராட்சியில் எந்தப் பணியும் நடைபெறுவதில்லை எனக் கூறி நகராட்சி தலைவரை ஒருமையில் பேசினாா்.

நகராட்சித் தலைவரை ஒருமையில் பேசியதற்கு அதிமுக, பாஜக, காங்கிரஸ், திமுக கவுன்சிலா்கள் கண்டனம் தெரிவித்தனா். மேலும் கவுன்சிலா் செளந்திரராஜனை கண்டித்து அனைவரும் ஒரு மனதாக கண்டன தீா்மானம் கொண்டு வந்தனா்.

எஸ்.செளந்தரராஜன், 16ஆவது வாா்டு உறுப்பினா் ஆ.ருக்மணி ஆகியோா் அவா்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தில் பேசாமல் குறுக்கிட்டு கூட்டத்தை நடத்த விடாமல் இடையூறு செய்ததுடன் நகா்மன்றத் தலைவரை ஒருமையில் பேசியது தவறு. எனவே இவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தீா்மானத்தில் வலியுறுத்தியுள்ளனா். கூட்டத்தில் 49 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT