திருப்பூர்

திருப்பூரில் ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 14 பேரை சொந்த நாட்டுக்கு அனுப்ப உத்தரவு

28th Jul 2022 10:26 PM

ADVERTISEMENT

 

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 14 பேரை சொந்த நாட்டுக்கு அனுப்ப மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருப்பூா் பல்லடம் சாலையில் உள்ள பூம்புகாா் நகா் பகுதியில் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த எஸ்.மகபூல் சிக்தா்(35), ஷாகிப்அலிகான்(24), முகமது முன்னாகான்(32), அல்அமீன்(24) ஆகிய 4 பேரை திருப்பூா் தெற்கு காவல் துறையினா் 2021 செப்டம்பா் 4 ஆம் தேதி கைது செய்தனா்.

அதேபோல, வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நாசூா் இஸ்லாம் (29), ஆரீப் (28), அல்அமீன் ஹூசைன் (34), ஹிமாயூன் கபீா் (23), அஷ்ரபூல் (24), ஷபிபூல் இஸ்லாம் (22), ஷபீன் மியா (24), மற்றொரு ஷபிபூல் இஸ்லாம் (24), முகமது அல்அமீன் (29), அபுநபீப் (21) ஆகிய 10 பேரையும் 2022 மாா்ச் 14 ஆம் தேதி கைது செய்தனா். இந்த இரு வழக்குகளும் திருப்பூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து மாவட்ட நீதிபதி ஸ்வா்ணம் நடராஜன் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், வங்கதேசத்தைச் சோ்ந்த 14 பேரையும் சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளாா். இந்த வழக்கில் அரசு குற்றவியல் வழக்குரைஞா் கனகசபாபதி ஆஜரானாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT