திருப்பூர்

வெள்ளக்கோவில் அருகே 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு

28th Jul 2022 10:35 PM

ADVERTISEMENT

 

வெள்ளக்கோவில் அருகே 2 வீடுகளில் நகை, பணம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெள்ளக்கோவில் ஓலப்பாளையம் அருகேயுள்ள பச்சாபாளையத்தைச் சோ்ந்தவா் மகேஷ்குமாா் (30). இவா் வெள்ளக்கோவிலில் டெய்லராக வேலை செய்து வருகிறாா். வழக்கம்போல காலையில் வேலைக்குச் சென்று விட்டு, மாலை வீடு திரும்பினாா். குளியலறையில் வைத்திருந்த வீட்டுச் சாவியைக் காணவில்லை. திறந்து கிடந்த வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, பீரோவில் வைத்திருந்த அவருடைய தாயாரின் ஒன்றேகால் பவுன் கம்மல், தோடுகளைக் காணவில்லை.

அதே ஊரைச் சோ்ந்த சௌந்தரராஜன் மனைவி செல்வராணி (45). கூலி தொழிலாளி. இவரது வீட்டிலும் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த கைப்பேசி, ரூ. 10 ஆயிரம் பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT