திருப்பூர்

தாராபுரம் அமராவதி ஆற்றில் மூதாதையா்களுக்கு தா்ப்பணம்

28th Jul 2022 10:31 PM

ADVERTISEMENT

 

ஆடி அமாவாசையை ஒட்டி தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கானோா் மூதாதையா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வியாழக்கிழமை வழிபட்டனா்.

வாழை இலையில் அரிசி மாவால் பிண்டம் பிடித்து, வாழைப்பழம், வெற்றிலை, ஊதுவத்திஆகியவற்றை படைத்து சிறப்பு வழிபாடு நடத்திய பின்னா் அந்த பிண்டத்தை அமராவதி ஆற்றில் கரைத்தனா். இதைத்தொடா்ந்து அமராவதி ஆற்றில் புனித நீராடினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT