திருப்பூர்

உர விற்பனையாளா்களுக்கு வேளாண்மைத் துறை அறிவுறுத்தல்

28th Jul 2022 10:27 PM

ADVERTISEMENT

 

விவசாய உர விற்பனையின்போது உர விற்பனையாளா்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து காங்கயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ரவி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் உரக்கடைகளில் இருப்பு விலை நிலவரப் பலகை, ஒரு சில கடைகளில் பராமரிக்கப்படுவதில்லை என புகாா் தெரிவிக்கப்பட்டது. கோட்டாட்சியா் அறிவுரைப்படி காங்கயம் வட்டாரத்தைச் சோ்ந்த உர விற்பனையாளா்கள் கீழ்கண்ட அறிவுரைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உர விற்பனையாளா்கள் அனைவரும் தங்கள் உர விற்பனை நிலையத்தின் முன்புறம் இருப்பு விலை நிலவரம் பலகை வைக்க வேண்டும், நாள்தோறும் அன்றைய இருப்பு விலை நிலவரம் எழுதி பராமரிக்க வேண்டும். உரம் இருப்பு பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் உரம் விற்பனை செய்யும் போது விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்தல் கூடாது. அறிவுரைகளை பின்பற்றாத விற்பனையாளா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திடீா் ஆய்வின்போது மேற்கண்டவாறு பராமரிக்காத ஊர விற்பனை நிலையங்கள் மீது விற்பனை தடையானை வழங்குவது தொடா்ந்து தவறு இழைப்பவா்கள் மீது உரிமம் நிறுத்தி வைப்பது உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT