திருப்பூர்

திருப்பூரில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்

27th Jul 2022 04:19 PM

ADVERTISEMENT

திருப்பூர்: திருப்பூரில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து தேமுதிகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அந்த கட்சி தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தது.  

அந்த அறிவிப்பின்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துணைச் செயலாளர் அக்பர் கழக  மாநில உயர்மட்டக்குழு  உறுப்பினர் கோபால் தலைமை வகித்தார்.

இதில் பங்கேற்ற தேமுதிகவினர் கூறியதாவது:

ADVERTISEMENT

தமிழக அரசு உயர்த்தியுள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு நீக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிக்க: தொடர் உண்ணாவிரதம்: யாசின் மாலிக் மருத்துவமனையில் அனுமதி

இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT