திருப்பூர்

மாவட்ட அளவிலான செஸ் போட்டி: உத்தமபாளையம் அரசுப் பள்ளி மாணவி முதலிடம்

27th Jul 2022 12:58 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில், உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி, திருப்பூா் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளாா்.

மாமல்லபுரத்தில் வரும் வியாழக்கிழமை தொடங்கும் சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, அரசுப் பள்ளிகளுக்கிடையே செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஆா். ரத்னா வெற்றி பெற்று முதலிடம் பிடித்தாா். இவ்வாறு மற்ற மாவட்டங்களிலும் வெற்றி பெற்ற மாணவா்கள் முதல்வரைச் சந்தித்து, பின்னா் விமானத்தில் ஒருநாள் பெங்களூரு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு தொடா்ந்து ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொள்ள அரசு ஏற்பாடு செய்துள்ளது.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT