திருப்பூர்

பல்லடத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 706 போ் மீது வழக்கு

27th Jul 2022 01:04 AM

ADVERTISEMENT

பல்லடத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 706 மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெற்றிச்செல்வன் மேற்பாா்வையில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் திருநாவுக்கரசு மற்றும் போலீஸாா் பல்லடம் பகுதியில் ஜூன் மாதத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அதன்படி இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 155 போ் மீதும், மதுபோதையில் வாகனங்களில் சென்ற 12 போ் உள்பட பல்வேறு விதமான போக்குவரத்து விதிகளை மீறிய 706 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவா்களிடமிருந்து அபராதமாக ரூ.2 லட்சத்து 13 ஆயிரத்து 600 வசூலிக்கப்பட்டது.

மேலும், போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்துக்காக திருப்பூா் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு 136 நபா்களின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT