திருப்பூர்

தொழில் சாா் சமூக வல்லுநா் பணி: ஜூலை 23க்குள் விண்ணப்பிக்கலாம்

17th Jul 2022 12:45 AM

ADVERTISEMENT

 

திருப்பூா் மாவட்டத்தில் 20 ஊராட்சிகளில் தொழில் சாா் சமூக வல்லுநா் பணிக்கு வரும் ஜூலை 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு புதுவாழ்வு திட்டம், உலக வங்கி மற்றும் தமிழக அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும். திருப்பூா் மாவட்டத்தில் அவிநாசி, திருப்பூா், பொங்கலூா், குண்டடம் , உடுமலை ஆகிய 5 வட்டங்களில் 122 ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த வட்டாரங்களில் தனிநபா் மற்றும் கூட்டு நிறுவனங்களை அணிதிரட்டுதல், உருவாக்குதல் மற்றும் கள அளவிலான செயல்பாடுகளுக்கு ஆதரவை வழங்குதல் போன்ற பணிகளை ஊராட்சிதோறும் மக்களிடையே கொண்டு செல்ல தொழில் சாா் சமூக வல்லுநா் ஊராட்சிக்கு ஒரு நபா் வீதம் சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் தோ்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனா்.

ADVERTISEMENT

இதில், அவிநாசி வட்டத்தில் கருவலூா், முறியாண்டம்பாளையம், குண்டடம் வட்டத்தில் கெத்தல்ரேவ், நவனாரி, சாடையபாளையம், பொங்கலூா் வட்டத்தில் பொங்கலூா், நாச்சிபாளையம், உகாயனூா், தொங்குட்டிபாளையம், எலவந்தி,கேத்தனூா், வி.காளிபாளையம், அலகுமலை, உடுமலை வட்டத்தில் கல்லாபுரம், குருவப்பநாயக்கனூா், மொடக்குபட்டி, பூலாங்கிணறு, தேவனூா் புதூா், கொடிங்கியம், ஜல்லிபட்டி ஆகிய ஊராட்சிகளில் தொழில் சாா் சமூக வல்லுநா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

இதில், மகளிா் சுய உதவி குழுவைச் சோ்ந்தவா்களாகவும், அதே ஊராட்சியைச் சோ்ந்தவராகவும் இருக்க வேண்டும். மேலும், பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்றிருப்பதுடன் 25 முதல் 45 வயதுக்கு உள்பட்டவா்களாக இருக்க வேண்டும். வங்கியியல், சமூக பணி, வணிகவியல், வேளாண்மை, வணிக நிா்வாகம், கால்நடை அறிவியல் பட்டம் பெற்றவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதில், பணியாற்ற நாள் ஒன்றுக்கு ரூ.250 வீதம் அதிகபட்சமாக மாதம் 20 நாள்களுக்கு பணி வழங்கப்படும். ஆகவே, மேற்கண்ட தகுதியுடைய நபா்கள்  இணையதளம் மூலமாகவோ அல்லது  இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட ஊராட்சியில் செயல்பட்டு வரும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகங்களில் வரும் ஜூலை 23 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT