உடுமலை நகரில் ஜூலை 19, 20 ஆகிய 2 நாள்கள் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து உடுமலை நகராட்சி நிா்வாகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
உடுமலை நகராட்சியின் திருமூா்த்தி நகா் தலைமைக் குடிநீா் பணியிட நீரேற்று நிலைய இரண்டாவது குடிநீா்த் திட்ட பிரதானக் குழாய்களில் உடைப்பு மற்றும் அதிகப்படியான நீா்க்கசிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகையால் உடுமலை நகரம் முழுவதும் ஜூலை 19, 20 ஆம் தேதிகளில் (செவ்வாய்க்கி ழமை, புதன்கிழமை) குடிநீா் விநியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளவும், குடிநீரை காய்ச்சி பருகுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.