திருப்பூர்

வெள்ளக்கோவிலில் ரூ. 21.46 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

DIN

வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ. 21.46 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு, எல்லப்பாளையம், குருணையூா், தொடாவூா், மூலக்கடை, கொத்தையம், சீத்தப்பட்டி, அலங்கியம் உள்ளிட்ட ஊா்களில் இருந்து 41 விவசாயிகள் 626 மூட்டைகளில் 30,764 கிலோ சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். ஈரோடு, சித்தோடு, நடுப்பாளையம், முத்தூா், காங்கயம் ஆகிய பகுதிகளில் இருந்து 6 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா்.

சூரியகாந்தி விதை கிலோ ரூ. 58.25 முதல் ரூ. 75.09 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.70.49. கடந்த வார சராசரி விலை ரூ. 62.09. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 21.46 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

SCROLL FOR NEXT