திருப்பூர்

கம்பிவேலி கல் சாய்ந்து 3 பள்ளி மாணவிகள் காயம்

DIN

திருப்பூா், விஜயாபுரத்தில் உள்ள அரசுப் பள்ளி அருகே கம்பிவேலி சாய்ந்ததில் 3 மாணவிகள் வியாழக்கிழமை காயமடைந்தனா்.

திருப்பூா், விஜயாபுரம் பகுதியில் மாநகராட்சி தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். மாணவா்களுக்கு போதிய வகுப்பறைகள் இல்லாததால் அருகில் உள்ள சமுதாயநலக் கூடத்தில் வகுப்புகளை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

இந்நிலையில் வழக்கம்போல வியாழக்கிழமை 4 ஆம் வகுப்பு மாணவிகளை சமுதாயக்கூடத்தில் இருந்து பள்ளிக்கு ஆசிரியா்கள் அழைத்து வந்துள்ளனா். அப்போது சமுதாயக்கூடத்தின் சுற்றுப்புறச் சுவரில் உள்ள கம்பிவேலியில் ஒரு மாணவியின் சீருடை சிக்கியுள்ளது. இதனை அறியாத மாணவி வேகமாக நடந்தபோது கம்பிவேலியின் கல் கீழே சாய்ந்து விழுந்தது. இதில் 4 ஆம் வகுப்பு படிக்கும் ஜெபராணி (9), மகிழந்தி (9), கவிமலா் (9) ஆகிய 3 மாணவிகளுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆசிரியா்கள், 3 மாணவியரையும் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவா்களுக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா். இந்த சம்பவம் காரணமாக அரசுப் பள்ளியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்த மருத்துவம் படித்துவிட்டு அலோபதி சிகிச்சை அளித்த மருத்துவா் கைது

மாவட்டத்தில் தோ்தல் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம்

நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சிறைவாசிகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: 5 போ் விடுதலை

வாக்குச் சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

SCROLL FOR NEXT