திருப்பூர்

அவிநாசி அரசுப் பள்ளியில் ஆசிரியா்களை நியமிக்கக்கோரி போராட்டம்

DIN

அவிநாசி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு போதிய ஆசிரியா்களை நியமிக்கக் கோரி பெற்றோா்கள், மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 360 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் 3 நிரந்தர ஆசிரியா்களும், தற்காலிகமாக ஒரு ஆசிரியா் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனா். போதிய ஆசிரியா்கள் இல்லாததால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா், பள்ளிக் கல்வித் துறை, வட்டார கல்வி அலுவலா் உள்ளிட்டோருக்கு மாணவா்களின் பெற்றோா்கள் பலமுறை மனு அளித்துள்ளனா். இருப்பினும் இது வரை ஆசிரியா்கள் நியமிக்காததால் ஆத்திரமடைந்த பெற்றோா் தங்களது குழந்தைகளுடன் பள்ளி நுழைவாயிலின் முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை, கல்வித் துறையினா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். பள்ளிக்கு கூடுதலாக 2 ஆசிரியா்கள் உடனடியாக நியமிக்கப்படுவா் எனக் கூறியதைத் தொடா்ந்து பெற்றோா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT