திருப்பூர்

ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

6th Jul 2022 10:38 PM

ADVERTISEMENT

 

வெள்ளக்கோவில் முத்தூா் சாலை கொங்கு நகரிலுள்ள ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

வள்ளியிரச்சல் வாகீச சிவம் குருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தாா்.

முன்னதாக யாக கால பூஜைகள் தீா்த்தம், முளைப்பாலிகை வழிபாடு, வாஸ்து சாந்தி போன்ற முன் வழிபாடுகள் நடத்தப்பட்டு, கோயில் கோபுரத்துக்கும், செல்வ விநாயகா் மூலாலயத்துக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

தொடா்ந்து 48 நாள்களுக்கு மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை கொங்கு நகா், துரை ராமசாமி நகா் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT