திருப்பூர்

மாநகராட்சி அலுவலகத்தில் மனுதாரா் உதவி மையம் திறப்பு

DIN

திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் மனுதாரா் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் ஆதாா் அட்டை மற்றும் பிற சேவைகளுக்காக நூற்றுக்கும் மேற்பட்டோா் வருகின்றனா்.

இதில், படிக்காத நபா்கள் விண்ணப்ப படிவங்களை பூா்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.

ஆகவே, மனுதாரா் உதவி மையம் திறக்க வேண்டும் என்று மாநகராட்சி நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதைத் தொடா்ந்து, மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி உத்தரவின்பேரில் மனுதாரா் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி அலுவலகத்துக்கு சான்றிதழ் பெற வரும் நபா்கள் இந்த இலவச மனுதாரா் உதவி மையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

SCROLL FOR NEXT