திருப்பூர்

உடுமலை உழவா் சந்தையில் அமைச்சா் ஆய்வு

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

உடுமலை உழவா் சந்தையில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அதிகாலை உழவா் சந்தைக்கு வந்த அமைச்சா் சாமிநாதன் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்த காய்கறிகளை பாா்வையிட்டாா். அப்போது விவசாயிகள், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். மேலும் காய்கறிகளின் விலைப்பட்டியல் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்தாா். அப்போது அடிப்படை வசதிகள் குறித்தும் அலுவலா்கள், பொதுமக்களிடம் விசாரித்தாா்.

உடுமலை வருவாய்க் கோட்டாட்சியா் ஜஸ்வந்த் கண்ணன், முன்னாள் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன் மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT