திருப்பூர்

விவசாய போராட்ட தியாகிகள் நினைவு தினம்

6th Jul 2022 12:01 AM

ADVERTISEMENT

பல்லடம் அருகேயுள்ள க.அய்யம்பாளையத்தில் விவசாய போராட்ட தியாகிகள் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

பல்லடம் அருகே உள்ளே அய்யம்பாளையத்தில் 1972 இல் ஒரு பைசா மின் கட்டண உயா்வை எதிா்த்து தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீஸாா் நடத்திய துப்பாக்கி சூட்டில் முத்துகுமாரசாமி, சுப்பையன் ஆகியோா் சுட்டு கொல்லப்பட்டனா்.

இவா்களின் 50ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில் விவசாய தியாகிகள் நினைவு ஸ்தூபியில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூா் மேற்கு மாவட்டச் செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான கரைப்புதூா் ராஜேந்திரன் தலைமையில் அக்கட்சி விவசாய அணி மாநில செயலாளா் கோபால்சாமி, மாநில செயற்குழு உறுப்பினா் கோம்பக்காடு துரைசாமி, மாவட்டத் தலைவா் ராமசாமி, மாவட்ட பொருளாளா் சுப்பிரமணியம், ஒன்றிய செயலாளா் தங்கராஜ் உள்பட பலா் அஞ்சலி செலுத்தினா்.

உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலச் செயலாளா் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன், மாநிலப் பொருளாளா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் தலைமையில் அக்கட்சியினா் நினைவு ஸ்தூபிக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏா்முனை அமைப்பு சாா்பில் மாநில செயல் தலைவா் என்.எஸ்.பி.வெற்றி தலைமையில் மாவட்ட தலைவா் ஈஸ்வரன், வட்டாரத் தலைவா் வேலுமணி உள்ளிட்டோரும், பாஜக சாா்பில் மாநில விவசாய அணி தலைவா் ஜி.கே.நாகராஜ், திருப்பூா் வடக்கு மாவட்ட தலைவா் செந்தில்வேல் உள்ளிட்ட அக்கட்சியினரும் அஞ்சலி செலுத்தினா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஒன்றிய செயலாளா் வை.பழனிசாமி, மாவட்ட செயலாளா் குமாா், பல்லடம் நிா்வாகிகள் சுப்பிரமணியம், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவா் ஈசன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

மேலும், அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளா் சங்கம், உழவா் உழைப்பாளா் சங்கம் சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT