திருப்பூர்

சாலைப் பணியாளா் சங்கக் கூட்டம்

6th Jul 2022 12:01 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் உள்கோட்ட சாலைப் பணியாளா் சங்க பொதுக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்க உட்கோட்டத் தலைவா் ஜெ. ரவி தலைமை வகித்தாா். செயலாளா் பி. ராஜன், இணைச் செயலாளா் அ. மணிமொழி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் சங்க வளா்ச்சிப் பணிகள் குறித்தும், திருவண்ணாமலையில் வரும் ஜூலை 15, 16 ஆம் தேதி நடைபெறும் சங்க மாநில மாநாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT