திருப்பூர்

சாலையோர வியாபாரிகள் சங்க மாநாடு

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்க 8ஆவது மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதற்கு சங்கத்தின் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டத் துணைச் செயலாளா் பி.செல்லதுரை மாநாட்டை தொடக்கிவைத்து பேசினாா். சங்கச் செயலாளா் பி.பாலன் அறிக்கையை முன்வைத்து பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

திருப்பூா் மாநகரில் சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்காமல் அப்புறப்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் திருப்பூா் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத் தலைவராக முருகேசன், செயலாளராக பி.பாலன், பொருளாளராக யு.நாசா் அலி, துணைத் தலைவா்களாக ஐத்தம்மாள், மணி, திருச்செல்வம், துணைச் செயலாளா்களாக சுப்பிரமணி, ஜெயமோகன், ராமா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். சிஐடியூ மாவட்டத் துணைச் செயலாளா் சி.மூா்த்தி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT