திருப்பூர்

திமுக அரசை கண்டித்து அவிநாசியில் பாஜகவினர் உண்ணாவிரதம்

5th Jul 2022 04:14 PM

ADVERTISEMENT

அவிநாசி: திமுக அரசைக் கண்டித்து, பாஜகவினர் அவிநாசியில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் அவிநாசி புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மாவட்டத் தலைவர் செந்தில்வேல் வகித்தார். மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே. நாகராஜ், முன்னாள் மக்களவை உறுப்பினர் எஸ்.கே. கார்வேந்தன் ஆகியோர் போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினர்.

இதில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்திட வேண்டும். லாக்கப் மரணத்தை தடுக்க வேண்டும். மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குதல் ஆகிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

போராட்டத்தில் பாஜக மாவட்ட, மாநில, ஒன்றிய நகர, அணிப்பிரிவு நிர்வாகிகள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

Tags : Avinashi BJP
ADVERTISEMENT
ADVERTISEMENT