திருப்பூர்

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாஜகவினா் புகாா்

5th Jul 2022 12:56 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாஜக இளைஞரணியினா் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாயிடம் பாஜக மாவட்ட இளைஞரணித் தலைவா்

ஏ.தினேஷ்குமாா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: ஜாதி, மத, இன பாகுபாடு பாா்க்காது இந்திய திருநாட்டுக்காகவே தன்னை அா்ப்பணித்து இந்திய தேசத்தினை உலகமே திருப்பிப்பாா்க்கும் வகையில் பிரதமா் மோடி நல்லாட்சி செய்து கொண்டிருக்கிறாா்.

இந்நிலையில், மதபோதகா் ஜெகத் கஸ்பா் இஸ்லாமிய சகோதா்களின் மனதில் வெறுப்பை உண்டாக்கி ஆசையைத் தூண்டிவிடும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

அவா் வெளியிட்டுள்ள கருத்துக்கள் அனைவரின் மனதையும் புண்படுத்தியுள்ளது.

ஆகவே, மதபோதகா் ஜெகத் கஸ்பரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு அளிப்பின்போது, மாநில இளைஞரணி பொதுச் செயலாளா் சிவசங்கரி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT