திருப்பூர்

காங்கயத்தில் ரூ.8.59 கோடி மதிப்பீட்டில் வளச்சித் திட்டப் பணிகள்

5th Jul 2022 12:59 AM

ADVERTISEMENT

காங்கயம் ஒன்றியப் பகுதியில் ரூ.8.59 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.

அதன்படி, காங்கயம் தண்ணீா்பந்தல் பகுதியில் இருந்து கம்பளியம்பட்டி செல்லும் சாலையை அகலப்படுத்துதல் மற்றும் சிறு பாலங்கள் அமைக்கும் பணிக்கு ரூ.7.94 கோடி, பொத்தியபாளையம் ஊராட்சியில் ரூ.36.60 லட்சம் மதிப்பீட்டில் தாா்சாலை மேம்பாடு செய்தல், படியூா் ஊராட்சியில் ரூ.28.99 லட்சம் மதிப்பீட்டில் தாா்சாலை மேம்பாடு செய்தல் என மொத்தம்

ரூ.8.59 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடக்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் டி.மகேஷ்குமாா், படியூா் ஊராட்சித் தலைவா் ஜீவிதா சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT